ஏமாற்றம் இருக்காது...மாற்றம் இருக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் பதில் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் என முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கும் நிலையில், அடுத்து என்னென்ன நடக்கும் என அறிவாலய வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.