தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முயற்சி மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாய் பணிபுரிந்து வந்தவர் உதயநிதி என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இனி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயனடையும் வண்ணம் அவரது பணி மேன்மேலும் சிறக்கும் என வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.