துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பழங்குடியின மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.‘நேரு யுவ கேந்திரா சங்கதன்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.