புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி 33க்கு 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம், 32க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிவடைந்தது.