கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சாலையில் சறுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பியதன் சிசிடிவி காட்சி வெளியானது. எடச்சேரி அருகே, இருசக்கர வாகன ஓட்டி சாலையில் சறுக்கி விழுந்து வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது எதிர்திசையில் வந்த ஜீப்புக்கு அடியில் சென்ற நிலையில், ஜீப் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். ஜீப்புக்கு அடியில் பின்பக்க டயரில் சிக்கிக் கொண்டவரை, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று மீட்டனர்.