உத்தரபிரதேசம், அலிகார்... வழக்கம்போல் காரில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர். சடாரென குறுக்கே பாய்ந்து வழிமறித்து நின்ற கும்பல். காரில் இருந்த தொழிலதிபரை ஆயுதங்களால் துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம். கூலிப்படையை ஏவி தொழிலதிபரை கொலை செய்தது யார்? கொடூர கொலையின் பின்னணி என்ன?உத்தரபிரதேச மாநிலம், அலிகார்ல உள்ள லோதா-ங்குற பகுதியில ராஜ்குமாருக்கு சொந்த வீடு இருக்கு. இவரோட மேல் வீட்டுல பாபிகுமார் அப்டிங்குறவரு ரெண்டு வருஷத்துக்கு மேல வாடகைக்கு குடியிருந்துருக்காரு. இதுக்கு இடையில, ராஜ்குமார் பிசினஸ் விஷயமா வெளியே போன நேரம், அவரோட மனைவி ஜோதி சர்மாவுக்கும், வாடகை வீட்டுல இருந்த பாபிக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கு. இந்த தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா பார்டர கிராஸ் பண்ணிருக்கு. இந்த விஷயம், ராஜ்குமார் காதுக்கு போக, அவரு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருக்காரு. தனக்கு துரோகம் பண்ண மனைவிய ஒரு வழிபண்ணதோட, வாடகைக்கு குடியிருக்க விட்டா என் குடியவே கெடுக்குறியான்னு சொல்லி, பாபிப வீட்டவிட்டு துரத்திவிட்டிருக்காரு.ராஜ்குமாரோட வீட்டுல இருந்து போன பாபி, அவரோட வாழ்க்கையில இருந்து மொத்தமா போகவே இல்ல. வேற ஒரு வீட்டுக்கு குடிபோன பிறகும்கூட, ஜோதி சர்மா கூட பேசுறதையும் பழகுறதையும் பாபி நிறுத்தல. என்ன பண்ணாலும் எவ்வளவு சொன்னாலும் ரெண்டு பேரும் அடங்க மாட்டிராங்களேன்னு கொந்தளிச்ச ராஜ்குமார், மனைவி ஜோதிசர்மாவ கண்டிச்சு அடிக்கடி சண்ட போட்டிருக்காரு. தனக்கு பாபிதான் முக்கியம்னு நினச்ச ஜோதி, பாபிகூட சேந்து கணவன் ராஜ்குமாரோட கதைய முடிக்க பிளான் போட்டிருக்காங்க. ராஜ்குமார போட்டுத்தள்ளிட்டா பல லட்சம் கொடுக்குறோம்னு கூலிப்படைக்கிட்ட டீல் பேசுன ஜோதியும், பாபியும் அட்வான்ஸா ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம், ராஜ்குமார தீவிரமா வாட்ச் பண்ண ஆரம்பிச்ச கூலிப்படை கும்பல், அவர் எப்போ எப்போ எங்க எங்க போராரு, வாராரு, யார் யாருலாம் அவர் கூட இருப்பாங்க அப்டி இப்படின்னு ஃபுல் டீடெய்ல்ஸையும் நுனி விரல்ல வச்சிருந்துருக்காங்க. வழக்கம் போல காலையில வெளிய கிளம்பி போற டைம்தான் அவர போட்டுத் தள்ளுரதுக்கான சரியான டைம்னு முடிவு பண்ண கும்பல், அதே மாதிரி வீட்டுல இருந்து கார எடுத்துட்டு போயிட்டு இருந்த ராஜ்குமார சுத்தி வளைச்சு நின்னுருக்கு அந்த கூலிப்படை கும்பல்.என்ன ஏதுன்னு புரியாம இருந்த ராஜ்குமார காருக்குள்ளே வச்சு பயங்கர ஆயுதங்களால தாக்கி அவர துடிக்க துடிக்க கொன்னுட்டு அந்த கும்பல் அங்க இருந்து மின்னல் வேகத்துல எஸ்கேப் ஆகிருக்குது. அதுமட்டுமில்லாம, ஆண் நண்பன் பாபிக்கூட சேந்து கணவன கொலை செஞ்ச மனைவி ஜோதி அத ஆக்சிடண்ட் மாதிரி சித்தரிக்க போட்ட பிளானும் போலீசார் விசாரணையில வெளிச்சத்துக்கு வந்து, ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஷாக்காக வச்சிருக்குது. அதுக்குப்பிறகு, மனைவி ஜோதி, ஆண் நண்பர் பாபி மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ண போலீஸ், அவங்களையும் கொலைக்கு உடந்தைய இருந்தவங்கன்னு மொத்தம் அஞ்சு பேர கைது செஞ்சு ஜெயில்ல அடச்சிட்டாங்க.