டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஏலம் நடைமுறை தொடங்கிய போது தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. தற்போது, எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் திட்டம் அமையவுள்ள இடத்தை மறு ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.