அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு தலைவர் துளசி கப்பார்ட்க்கு ((Tulsi Gabbard)), மகா கும்பமேளா கங்கை நீர் அடைக்கப்பட்ட கலசத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்த பேசினார்.