திருவண்ணாமலை மாவட்டம் கெழங்குணம் கிராமத்தில் முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய தயாரான இளைஞரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கெழங்குணத்தை சேர்ந்த பிரபாகரனை கைது செய்ய கோரி மறியல் செய்ததால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.