மத்திய அரசு தமிழக எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம் என கூறி விட்டு, வட மாநிலத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார். சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்க கூட்டத்தில் பேசிய அவர், ஆங்கிலம் எனும் பெரிய பூனை இருக்கும்போது, இந்தி எனும் சின்ன பூனை எதற்கு? என்று அண்ணாவின் கதையை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.இதையும் படியுங்கள் : அதிமுகவை தனியாக தேர்தலை சந்திக்க பாஜக அனுமதிக்காது.. அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி-விசிக தலைவர் திருமாவளவன்