ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 0.5% பொருளாதாரம் சுருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய மதிப்பீடுகளை விட மோசமானது என்பதால், ட்ரம்ப் அரசுக்கு இது ஒரு சவாலாக கருதப்படுகிறது.