புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து வரும் 15-ஆம் தேதி டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.