அமெரிக்காவிற்கு குடியேறுபவர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் குடியேற்ற ஆவணங்களை தங்கள் கைகளில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அங்கு, 30 நாட்களுக்கு மேல் தங்குவதாக இருந்தால், தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்து, பதிவு ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். வேலை மற்றும் படிப்புக்கான விசா வைத்துள்ளோர் மற்றும் கிரீன் கார்டு வைத்துள்ளோர் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.