மெக்சிகோ, கனடா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீன பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தவறிய மெக்சிகோ, கனடா நாடுகளுக்கும் போதைப்பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவுக்கும் பதிலடி தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.