அரசாங்க நிறுவனங்களை கைப்பற்றுமாறு ஈரானியர்களை டிரம்ப் தூண்டுவதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, தனது எக்ஸ் தளத்தில் டிரம்பை கடுமையாக சாடியுள்ளார். அதில் டிரம்ப்பையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும் "ஈரான் மக்களின் முக்கிய கொலையாளிகள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம், பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றால் கோபமடைந்த ஈரான் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த அரசு பலப்பிரயோகம் நடத்தி வருகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் மீது ஈரானியர்கள் கடும் அதிருப்திஈரானில், தற்போது நடந்து வரும் போராட்டங்கள், அங்கு நடக்கும் ஆட்சியின் முடிவை குறிப்பதாக ஆக்ஸ்போர்டு முதுகலை ஆய்வாளர் ஹொசைன் ரஃபிபூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், 30 ஆண்டுகள் ஈரானில் வாழ்ந்து சீர்திருத்த இயக்கங்களில் பங்கேற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட பிரச்சினைகளை மையமாகக் கொண்ட முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல், தற்போதைய ஆட்சி இனி தொடர கூடாது என்பதில் ஈரானியர்கள் உறுதியாக உள்ளதாகவும் கூறினார். இதையும் பாருங்கள் - ரஷ்ய விமான தொழிற்சாலையை தகர்த்து உக்ரைன் பதிலடி