ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் கூறியுள்ள கருத்துகள் கவனத்தை பெற்றுள்ளது. டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவரிடம் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கப்படுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், எதுவேண்டுமானாலும் நடக்கலாம், நிலைமை மோசமாக உள்ளது என்றார்.