நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு, களத்தில் இறங்கி கோப்பையை வெல்வதற்கு இந்த வெற்றி ஊக்கமளித்துள்ளதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய மகளிர் அணியினரை நினைக்கும்போது பெருமையாக உள்ளதாக முன்னாள் வீரர் சேவாக்கும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதல்முறையாக வென்றதால், பெரும் மகிழ்ச்சி அடைந்த இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, கண்கலங்கிய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியை தனது மனைவி மற்றும் ஐசிசி தலைவர் ஜெய்ஷா ஆகியோருடன் இணைந்து, ரோகித் கண்டு களித்தார். இறுதிப்போட்டியை கண்டு ரசித்த இந்திய ஆடவர் அணிவிறுவிறுப்பாக நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை இந்திய ஆடவர் அணியினர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தலைமை பயிற்சியாளர் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், கிரிக்கெட் வீரர்கள் ரிங்கு சிங், பும்ரா உள்ளிட்டோர், நவி மும்பையில் உள்ள மைதானத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கண்டு ரசித்தனர்.