நடுங்க வைக்கும் த்ரில்லர் கதைகளுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட மலையாள வெப் சீரிஸ் ஒன்று, ஏழு மொழிகளில் மீண்டும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. மலையாளத்தில், நாஜிம் கோயா இயக்கி இருக்கும் 1000 Babies வெப் சீரிஸ் கடந்த ஆண்டு வெளியானது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆன இந்த வெப் சீரிஸ், த்ரில்லர் காட்சிகளால் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. சஞ்சு சிவம், ஜாய் மேத்யூ, ரகுமான் நடித்த இந்த வெப் தொடர், ஓராண்டுக்கு பிறகு, மறுபடியும் பேசப்படுகிறது. காரணம், திரில்லர் ரசிகர்களுக்காக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில், இந்த வெப் தொடர், மறுபடியும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. அதாவது அக்டோபர் 18ஆம் தேதியில் இருந்து 7 மொழிகளில் 1000 Babies வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.