முகமது சிராஜ் மோசமாக தன்னை தாக்கி பேசியதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்த நிலையில், அவர் பொய் சொல்வதாக சிராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், முகமது சிராஜின் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது சிராஜிடம், நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறியதற்கு, அவர் அதனை தவறாக புரிந்து கொண்டதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.