நெல்லை பணகுடி காவல் நிலைய கதவை எட்டி உதைத்து, பூந்தொட்டிகளை வீசி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் ஆடைகளை நீக்கி ஆபாசமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திருநங்கை ஒருவர் ஆடைகளை களைந்து ஓடிய வீடியோ வெளியாகி இருந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனஓட்டிகளை வழிமறித்து திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் வலுக்கட்டாயாமாக பணம் மற்றும் செல்போனை பறிப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு சாலையோர கடை ஒன்றில் உணவருந்த வந்தவர்களிடம் திருநங்கைகள் அத்துமீறி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் பணகுடி போலீசார் அந்த கடைக்கு விசாரிப்பதற்காக சென்றிருந்தனர். விசாரணை செய்து கொண்டிருந்தபோதே திருநங்கை இருவர் தனது ஆடையை நீக்கி ஆபாச முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.