பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்துவதற்காக நடந்த துப்பாக்கி சண்டையில் 20 ராணுவ வீரர்களை பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் சுட்டு கொன்றனர். குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவருக்கு 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். அப்போது பொதுமக்களை மட்டுமே இறக்கிவிட்ட அவர்கள், ராணுவம், போலீஸ், ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த 182 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.