இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக உள்ள சப்தம் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.