இமாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலாவின்போது பாராகிளைடிங் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குலு மாவட்டத்தில் உள்ள கர்சா தரையிறங்கும் இடத்திற்கு அருகே பாராகிளைடிங் டேக் ஆஃப் செய்யும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயது சுற்றுலாப் பயணி தவறி விழுந்து உயிரிழந்தார்.