இந்திய பங்கு சந்தைகள் இன்று மிகவும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் ஆயிரத்து 700 புள்ளிகள் வரை அதிகரித்து 76 ஆயிரத்து 852 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 540 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 828 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. சென்செக்சில், டாடா மோட்டார்ஸ், HDFC வங்கி,L&T உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், பொருளாதார மந்தம் குறித்த அச்சம் நீங்கி, முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் கூடுதல் முதலீடுகளை செய்து, பங்கு வர்த்தகம் எழுச்சியுடன் காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.