நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காலை நேரத்தில் அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய கடும் குளிர் நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக கோடநாடு, கீழ்கோத்தகிரி, கட்டப்பெட்டு, பாண்டியன் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் நிலவியது. முகப்பு விளக்குகளை எரிய விட்டும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர்.