கொலம்பியா நாட்டில் சுற்றுலா சென்ற பேருந்து வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 160 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 20 - க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.