தமிழக வெற்றிக்கழகத்துக்கான முதல் மாநில மாநாட்டுக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், அதற்கான முதல் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது.கூட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பற்றி பேசியதை விட, உட்கட்சி பஞ்சாயத்தையும் சோசியல் மீடியா அரசியலையும் பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்திய புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளின் பூசலை மாநாடு வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.