சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் விளையாடிய இந்தியா, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. எனவே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணியும், 2017-சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும் களமிறங்க உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது