இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று சென்னையின் எஃப்.சி. மற்றும் பெங்களூரு எஃப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.