தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வாங்கி வந்த லட்டுவை வீட்டில் சாப்பிட முயன்ற போது அதில் புகையிலை பாக்கெட் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இதனை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ள பக்தர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.