தலைநகர் டெல்லியை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்விக்கு இன்று விடை தெரிகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருத்து கணிப்புகளின் படி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.