அமெரிக்காவில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிரிய அதிபர் அல்-ஷாராவுக்கு வாசனை திரவியத்தை பரிசளித்த அதிபர் டிரம்ப்,உங்களுக்கு எத்தனை மனைவிகள்? எனக் கேட்க, அவர் அதிர்ந்து போனார். சிரியா அதிபர் அகமது அல்-ஷராவின் தலைமையிலான இடைக்கால அரசு, சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் மற்றும் ஆதாரவைக் கோரி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு வாசனை திரவிய பாட்டிலை வழங்கிய டிரம்ப் அதை அவர் மீது தெளித்து, அது மிக சிறந்த வாசனை திரவியம் என்றார். மற்றொன்று, உங்கள் மனைவிக்கு என்ற டிரம்ப், திடீரென, உங்களுக்கு எத்தனை மனைவிகள்? எனக் கேட்க சிரிய அதிபரும் சிரித்தபடியே, ஒன்றே ஒன்று தான் என பதிலளித்தார்.