வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் இன்று வரை நட்புறவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகொரியாவை போன்றே பிற நாடுகளிடமும் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது என்றார். இருப்பினும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வட கொரியா குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.