தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 327 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 மையங்களில் நடைபெற்று வருகிறது.இந்த தேர்வை எழுதுவதற்காக 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.