தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்களை அடித்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்கிறது.