தமிழக வெற்றிக் கழகத்தில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாகியிருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அருண்ராஜ் களமிறங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அந்த தொகுதியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரனும், அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் தொகுதியை கைப்பற்ற போட்டி போட்டு உழைத்து வரும் சூழலில், யார் வசம் போகிறது திருச்செங்கோடு என்பதனை இந்த தொகுப்பில் காணலாம்.20 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டைதொடர்ச்சியாக, 20 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் ஓட்டை போட்டு வெற்றி பெற்று கடந்த தேர்தலில் அதிரடி காட்டியது திமுக கூட்டணி. ஆனால், அந்த வெற்றியை இந்த முறை திமுக தக்கவைக்குமா என்பது தவெகவின் வருகையால் கேள்வியாக மாறியிருக்கிறது?கண்டும் காணாததை போல்...நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக திமுக கூட்டணியை சேர்ந்த கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பணியாற்றி வருகிறார். அதிமுக கோட்டையை திமுக உதவியுடன் கைப்பற்றியிருந்தாலும் ஈஸ்வரனின் செயல்பாடுகள் சொல்லுமளவுக்கு இல்லை என்கின்றனர் திருச்செங்கோட்டை சேர்ந்த திமுகவினர். பல திட்டங்களை கொண்டு வந்துள்ள போதிலும், தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளையோ கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைக்கும் பணியையோ ஈஸ்வரன் தொடங்கவில்லை என உள்ளூர் பிரமுகர்கள் குமுறுகின்றனர். தாம் செய்த நலத்திட்டப்பணிகள் மட்டுமே தனக்கு வெற்றியை தேடித் தந்துவிடும் என அசாத்திய நம்பிக்கையில் கூட்டணி கட்சியினரை கண்டும் காணாததை போல் ஈஸ்வரன் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.அருண்ராஜ் களமிறங்க இருப்பதாக தகவல்இந்நிலையில் தான், கைவிட்டு போன திருச்செங்கோட்டை மீண்டும் கைப்பற்றி கொடி நாட்ட அதிமுகவும் திட்டமிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.வான பொன்.சரஸ்வதிக்கே அதிமுக வாய்ப்பு வழங்கும் என உள்ளூர் அதிமுகவினர் பேசிக்கொள்கின்றனர். ஆனால், திருச்செங்கோட்டை தனக்கு கேட்கும் பாஜக அந்த தொகுதியில் முன்னாள் எம்.பி.யான கே.பி.ராமலிங்கத்தை களமிறக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திலும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி மும்முரமாகியிருக்கும் நிலையில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. களப்பணியில் அருண்ராஜ் டார்கெட் திருச்செங்கோடு என்ற இலக்குடன் களமிறங்கும் அருண்ராஜ், 3 மாத காலமாக தொகுதியிலேயே தான் முகாமிட்டு இருக்கிறார். திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கோவில் விழாக்களில் கலந்து கொள்வது, அன்னதானம் வழங்குவது என தினம் தினம் மக்களுடன் CONNECT ஆக இருந்து வருகிறார் அருண்ராஜ். திருச்செங் கோடு தொகுதி மக்களுக்கு அருண்ராஜ் முகம் பரீட்சயமாகவே மாறி விட்டது. அந்த அளவிற்கு 24 மணி நேரமும் பம்பரமாக சுழன்று நிர்வாகிகளை ஒருங்கிணைந்து களப்பணியில் வேகம் காட்டி வருகிறார்.தேர்தல் களத்தில் சவால்திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் செயல்பாடுகளை பார்த்து, சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரனும் கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணியில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட எண்ணிய ஈஸ்வரனுக்கு, அருண்ராஜ்ஜின் எண்ட்ரீ, தேர்தல் களத்தில் சவாலாக மாறியிருக்கிறது. நட்சத்திர தொகுதியான திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டத்தில், முக்கியமான தொகுதியாக திருச்செங்கோடு உள்ளது. இரண்டரை லட்சம் வாக்காளர்கள் வசிக்கும் திருச்செங்கோடு தொகுதி மக்களுக்கு பிரதான தொழிலே விவசாயமும், லாரி கட்டுவதும் தான். இத்தனை ஆண்டுகளாக திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றிக் கனியை ருசித்திருக்கும் நிலையில், வருகிற தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகமாக அறியப்படும் அருண்ராஜூம் களமிறங்க இருப்பதால், அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. திமுக vs அதிமுக vs தவெகதிருச்செங்கோடு தொகுதியில், பெரும்பான்மையாக கவுண்டர் சமூகத்தினரும், முதலியார் சமூகத்தினரும் வசித்து வரும் நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக இரு சமூகங்களும் இருக்கின்றன. இந்த நிலையில், திருச்செங்கோடு தொகுதியை பூர்வீகமாக கொண்ட அருண் ராஜுக்கு சமூக வாக்குகள் எளிதிலேயே கிடைக்கும் என்பது பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து பட்டியலின சமூகத்தினரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசித்து வரும் சூழலில், அனைத்து சமூக வாக்குகளுக்கும் குறி வைத்தும் வியூகம் அமைத்து பணியாற்றி வருகிறார் அருண்ராஜ் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். Related Link ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு?