திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கந்திலியில் டிப்பர் லாரி மோதியதில், பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கண்டு அவரது உறவினர்கள் உருண்டு புரண்டு அழுதனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் சதீஷ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சின்ன கந்திலி அருகே வந்தபோது சதீஷ்குமார் வந்த பைக் மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் கை துண்டாகி சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்த நிலையில் ஓட்டுநர் ரகுபதி மற்றும் டிப்பர் லாரியின் உரிமையாளர் கோவிந்தராஜ் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.