தோல்வியடைந்த அணியில் இருந்து ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை, பெங்களூரு அணி வீரர் டிம் டேவிட் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 50 ரன்கள் விளாசியதற்காக விருது கொடுக்கப்பட்டது. மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.