தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள சாலையில், திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அதில் கார்கள், மின் கம்பங்கள் விழுந்தன. கிட்டத்தட்ட 160 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டதை பார்த்த அங்கிருந்த பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அலறியடித்து ஓடினர். சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து, விரைந்து வந்த மீட்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நல் வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என கூறப்பட்டுள்ளது.