தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் சதமடித்து அசத்தினர். சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.