கல்லூரி செல்லும் பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை அனைவரும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்ல விரும்புகின்றனர். தற்போது ஆடை அலங்காரத்தில் ஜீன்ஸ் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இப்படி நாள் முழுதும் டைட் ஜீன்ஸ் அணிவதால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்வோம்...!நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் இடுப்பு மற்றும் முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுவதன் மூலம் இது தசைகள் மற்றும் நரம்புகளில் வலியை உருவாக்கி, நாளடைவில் நிரந்தரமான முதுகுவலிக்கு வழிவகுக்கும்,குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்பவருக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படும்.நாள் முழுதும் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய்களில் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, மேலும் சிறுநீர் தடுக்கப்படுவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகரித்து, UTI சிறுநிர் தொற்று ஏற்பட வாய்புள்ளது. இது உங்கள் உணவு செரிமானத்தைப் பாதிக்கும் இதனால் உங்களுக்கு அடிக்கடி வயிறு, உபசம் எரிச்சல் மற்றும் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் கால் பகுதியில் மரத்து போவது மற்றும் வீக்கம் ஏற்படலாம், மேலும் இது போன்ற ஆடைகளை அணிவதால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு வெரிக்கோஸ் நோய்கான வாய்ப்புள்ளது.மேலும் உங்கள் தோல் மூச்சுவிடும் தன்மை குறைவதால் வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து தோல் அரிப்பு, இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகளில் சருமத்தில் எரிச்சல் அதிகரிக்கும் நிலை ஏற்படும் இறுக்கமான ஜீன்ஸ் அணியும் பழக்கம் நாளுக்கு நாள் அனைவரிடமும் அதிகரித்து வரும் நிலையில் ஜீன்ஸ் வாங்கும் போது இனி இறுக்கமான ஆடைகளை வாங்காமல் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. நமக்கு தேவைப்படும் போது மட்டுமே இறுக்கமான ஜீன்ஸ் அணியலாம், மேலும் அடிக்கடி அணிவதையும் மேலும் நாள்முழுதும் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கலாம்.