விஸ்தாரா மற்றும் ஆகாஷா ஏர் நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.