உயர்நீதிமன்ற பெண் நீதிபதியின் செல்போன் எண் சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன் படுத்தியுள்ளதால் மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது செல்போன் எண் சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால் மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.சிறிது நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட கும்பல், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் புகாரளித்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.