கரூரில், நடிகர் விஜய் பேசிய கூட்டத்தில், 41 பேர் உயிரிழக்க கூட்ட நெரிசலே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி, பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களிடம் இப்படி கூறிய நயினார் நாகேந்திரன், நெரிசல் சம்பவம் நடந்த பிறகு விஜய் அங்கு இருந்திருந்தால், 41 பேரை அடித்து கொன்றவர்கள், அவரையும் அடித்து கொன்றிருந்தால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார். விஜய் வந்ததால் தான் கரூரில் கூட்டம் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்று கூறிய நயினார் நாகேந்திரன், அங்கிருந்தால் அவரது உயிருக்கு யார் பாதுகாப்பு என்றும் கேள்வி எழுப்பினார். திமுக அரசால் விஜய்க்கு மட்டும் அல்ல பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியது சர்ச்சையாகி உள்ளது.