போக்குவரத்து போலீசாரிடம் இருந்து, அபராதத்தைத் தவிர்க்க, இளைஞர் ஒருவர் ஹெல்மெட் ஆக வாணலியை பயன்படுத்திய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒரு விதி உள்ளது. ஆனால், சிலர் இந்த விதிகளை மீறுகிறார்கள். காவல்துறை விதிக்கும் அபராதத்தைத் தவிர்க்க, அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுக்கிறார்கள். இங்கே, இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர், ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் ஒரு வாணலியைப் பிடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பெங்களூர் ரூபேனா அக்ரஹாரா அருகே போக்குவரத்து நெரிசலில் பைக் ஓட்டுபவர் தலையில் ஒரு வாணலியுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்தக் காட்சியை வாகனத்தில் பயணித்த ஒரு பயணி படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையும் பாருங்கள் - Bangalore Helmet Viral Video | புது மாடல் ஹெல்மெட்டா இருக்குமோ? இளைஞரின் வைரல் வீடியோ