காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதனையொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.