மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40 சதவீதம் ஆகக் குறைக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசிய போது, இந்த கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.