விசிக தலைவர் திருமாவளவனுக்கு சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது எனவும், முதலமைச்சராகும் அவரது கனவு பலிக்காது என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஆன்மிகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்பதாகவும் கூறினார்.