சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன், முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் சிறுத்துப் போய்விட்டார் என்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்திற்கு கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாட்டை நடத்த தனக்கு துணிச்சல் உள்ளது என பதிலடி கொடுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், எதிர்பார்த்தது நிறைவேறாத விரக்தியில் தமிழிசை பேசி வருவதாக சாடியுள்ளார்.