மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மியாமியில் நடந்த FII முன்னுரிமை உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தொடர்ந்திருந்தால், உலகம், போரில் மூழ்கியிருக்கும் என்றும், இந்தப் போர்கள் எதிலும் அமெரிக்கா பங்கேற்காது என்றாலும், அவற்றைத் தடுப்பேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.